தடுப்பூசி போடாவிட்டால் கட்டாய விடுப்பு: முதல்வர் அதிரடி அறிவிப்பு!

வெள்ளி, 10 செப்டம்பர் 2021 (18:28 IST)
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்துவதற்கு தடுப்பூசிகள் செலுத்திக் கொள்ள வேண்டும் என்ற விழிப்புணர்வு பொதுமக்களுக்கு ஏற்படுத்தப்பட்டு வருகிறது என்பது தெரிந்ததே 
 
ஒரு சில மாநிலங்களில் தடுப்பு ஊசி செலுத்துவதற்கு பொதுமக்கள் அரசு ஊழியர்கள் கட்டாயப்படுத்தப்படுகின்றனர் என்பதும் தெரிந்ததே இந்த நிலையில் பஞ்சாப் அரசு அதிரடியாக இது குறித்த உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது 
 
செப்டம்பர் 15-ஆம் தேதிக்குள் முதல் டோஸ் தடுப்பு ஊசி செலுத்தாத பஞ்சாப் அரசு ஊழியர்களுக்கு கட்டாய விடுப்பு அறிவிக்கப்படும் என பஞ்சாப் முதல்வர் தெரிவித்துள்ளார். மருத்துவ காரணங்கள் தவிர வேறு எந்த காரணத்திற்காகவும் முதல் தடுப்பூசி போடாமல் இருப்பவர்களுக்கு இந்த கட்டாய விடுப்பு என திட்டவட்டமாக பஞ்சாப் அரசு அறிவித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது 
 
இதனை அடுத்து பஞ்சாப் மாநிலத்தில் தடுப்பூசி போடுவதற்கு அரசு ஊழியர்கள் பெருமளவில் முன் வந்து கொண்டிருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்