பெட்ரோல், டீசல் வரியை உளவு பாக்க யூஸ் பண்ணிருக்காங்க!? – மம்தா ஆவேசம்

Webdunia
புதன், 21 ஜூலை 2021 (17:36 IST)
இஸ்ரேல் பெகாசஸ் மென்பொருள் மூலம் உளவு வேலையில் ஈடுபட்டதாக எழுந்துள்ள புகார் குறித்து மத்திய அரசு மீது மம்தா பானர்ஜி ஆவேசமான விமர்சனம் வைத்துள்ளார்.

இஸ்ரேலின் என்.எஸ்.ஓ தயாரிக்கும் பெகாசஸ் மென்பொருள் உலகம் முழுவதும் உளவு வேலைகளில் ஈடுபட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளது உலகையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. இந்த விவகாரம் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இந்த உளவு விவகாரம் குறித்து மத்திய அரசை விமர்சித்துள்ள மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி “பெட்ரோல், டீசலுக்கு வரியை உயர்த்தி அந்த பணத்தை கொண்டு மத்திய அரசு மற்றவர்களை உளவு பார்த்து வருகிறது. இவ்வாறாக இந்தியாவை இருண்ட பாதைக்கு இந்த அரசு அழைத்து செல்கிறது” என கண்டனம் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்