காங்கிரஸ் ஆட்சி அமைத்தால் ராமர் கோயிலை புல்டோசரால் இடிப்பார்கள்: பிரதமர் மோடி பிரச்சாரம்

Siva

வெள்ளி, 17 மே 2024 (14:38 IST)
காங்கிரஸ் ஆட்சி அமைத்தால் அயோத்தியில் கட்டப்பட்டிருக்கும் ராமர் கோயிலை புல்டோசரால் இடித்துவிடுவார்கள் என பிரதமர் மோடி பிரச்சாரம் செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
பல ஆண்டுகளாக ராமர் கோவில் பிரச்சனை இருந்து வந்த நிலையில் ஒரு வழியாக சுப்ரீம் போட்டு தீர்ப்பின் அடிப்படையில் அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட்டது என்பதும் கடந்த ஆண்டு இந்த கோயில் திறக்கப்பட்டது என்பது தெரிந்தது. 
 
அயோத்தி ராமர் கோவிலுக்கு ஏராளமான சுற்றுப்பயணிகள் தினமும் வந்து கொண்டிருப்பதாக புறப்படும் நிலையில் அயோத்தி நகரமே இந்த ஒரே ஒரு கோவில் காரணமாக தற்போது சுற்றுலா நகரமாக மாறிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் பிரதமர் மோடி இன்று தேர்தல் பிரச்சாரம் செய்தபோது காங்கிரஸ், சமாஜ்வாதி கட்சி அமைத்தால் ராமர் கோவிலை புல்டோசரால் இடிப்பார்கள் என்று கோயிலில் இருக்கும் குழந்தை இராமர் மீண்டும் கூடாரத்துக்கு சென்று விடுவார் என்றும் பேசியிருக்கிறார். இந்த பெரும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Siva
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்