இலங்கைக்கு வந்தது இரண்டாம் தர அணியா? அர்ஜூனா ரணதுங்காவுக்கு நெட்டிசன்கள் பதிலடி!

புதன், 21 ஜூலை 2021 (16:07 IST)
விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்து நாட்டில் சுற்றுப்பயணம் செய்துவரும் நிலையில் இலங்கைக்கு ஷிகர் தவான் தலைமையிலான அணி ஒன்று அனுப்பப்பட்டது. இந்த அணி குறித்து விமர்சனம் செய்த முன்னாள் இலங்கை கிரிக்கெட் அணியின் கேப்டன் அர்ஜுனா ரணதுங்கா இந்தியா தனது இரண்டாம் தர அணியை இலங்கைக்கு அனுப்பி உள்ளது என்றும் இது இலங்கை அணிக்கு மிகவும் அவமானம் என்றும் தெரிவித்திருந்தார் 
 
இந்த நிலையில் இலங்கையில் நடைபெற்ற இரண்டு ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இரண்டிலுமே இந்திய அணி அபாரமாக வெற்றி பெற்றதையடுத்து நெட்டிசன்கள் அர்ஜுனா ரணதுங்கா வுக்கு பதிலடி கொடுத்துள்ளனர்.
 
இலங்கைக்கு வந்தது இரண்டாம்தர அணியா என்பதை இப்போது சொல்லுங்கள் பார்க்கலாம் என நெட்டிசன்கள் கூறி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இலங்கைக்கு சென்றுள்ள இந்திய அணியில் இளம் வீரர்கள் சுறுசுறுப்பாக விளையாடி வருகின்றனர் என்பதும் குறிப்பாக ஐபிஎல் போட்டிகளில் அதிரடியாக விளையாடிய வீரர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் வரும் 23ஆம் தேதி இலங்கை இந்திய அணிகளுக்கு இடையே 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நடைபெற இருக்கும் நிலையில் அந்த போட்டியையும் இந்தியா வெல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்