மும்பையில் இந்தியில் பேசி பிரச்சாரம் செய்த சரத்குமார்.. 3 மொழிகளில் பேசிய அண்ணாமலை..!

Siva

வெள்ளி, 17 மே 2024 (15:01 IST)
மும்பையில் அண்ணாமலை மற்றும் சரத்குமார் தேர்தல் பிரச்சாரம் செய்து வரும் நிலையில் ஹிந்தியில் பேசி சரத்குமார் பிரச்சாரம் செய்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
 
மும்பையில் தாராவி பகுதிக்கு உட்பட்ட தென்மத்திய மும்பை தொகுதியில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, பாஜகவில் சமீபத்தில் இணைந்த சரத்குமார் ஆகிய இருவரும் பிரச்சாரம் செய்தனர்.
 
தாராவியில் தமிழர்கள் அதிகம் இருக்கும் பகுதியில் சரத்குமார் தமிழில் பேசி பிரச்சாரம் செய்வார் என்று தான் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் அந்த பகுதியில் பிரச்சாரம் செய்த போது ஹிந்தியில் பேசியது அனைவரையும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. சரத்குமார் தனது உரையில் பிரதமர் மோடியின் சாதனைகள் குறித்து பேசினார்.
 
 இதனை அடுத்து அண்ணாமலை பேசியபோது தமிழ், இந்தி, ஆங்கிலம் என்று மூன்று மொழிகளின் கலவையில் பேசினார். அண்ணாமலை மற்றும் சரத்குமார் பிரச்சாரத்திற்கு மும்பையில் உள்ள தாராவி பகுதியில் நல்ல வரவேற்பு கிடைத்ததாக கூறப்படுகிறது.
 
Edited by Siva
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்