ஒரே சிரஞ்சில் 39 மாணவர்களுக்கு வேக்சின் – அதிர வைக்கும் செய்தி!

Webdunia
வெள்ளி, 29 ஜூலை 2022 (08:24 IST)
மத்தியபிரதேச மாநிலத்தில் ஒரே சிரஞ்ச் மூலம் 39 மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சி அளித்துள்ளது.


மத்திய பிரதேச மாநிலம் சாகர் ரகரில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. இந்த நிகழ்வின் போது ஜித்தேந்திரா என்ற சுகாதார பணியாளர் 39 பள்ளி மாணவர்களுக்கு ஒரே ஊசியை பயன்படுத்தி கொரோனா தடுப்பூசி செலுத்தியுள்ளார்.

இதனையறிந்த பெற்றோர் பள்ளியில் போராட்டத்தில் ஈடுபட இது தொடர்பாக போலீஸ் வழக்குப்பதிவு செய்து சுகாதார ஊழியரை கைது செய்துள்ளனர். மேலும் இது தொடர்பான விசாரணை நடந்து வரும் நிலையில் முதற்கட்டமாக 15 வயதுடைய 9 – 12 படிக்கும் 39 மாணவர்களுக்கு இவ்வாறு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என தெரியவந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்