பல லட்சங்கள் அபராதம் கட்டிய ஆடம்பர கார் உரிமையாளர் !

Webdunia
வியாழன், 9 ஜனவரி 2020 (15:29 IST)
குஜராத் மாநிலத்தில் செல்வந்தர் ஒருவர் போலிஸாரிடம் ரூ. 27 அபராதம் கட்டியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த போர்ச என்ற கார் உற்பத்தி நிறுவனம்  விலை உயர்ந்த கார்களை உற்பத்தி செய்து வருகிறது.
 
இதன் தயாரிப்பான போர்ச 911 என்ற மாடல் காரை குஜராத் மாநிலத்தை சேர்ந்த ரஞ்சித் என்பவர் வாங்கியுள்ளார். இதன் மதிப்பு ரூ.2.15 கோடி ஆகும். இதன் இன்சூரன்ஸ் தொகை மட்டும் ரூ.8 லட்சத்திற்கும் அதிகம் என்று சொல்லப்படுகிறது.
 
இந்நிலையில், சமீபத்தில் ரஞ்சித் சாலையில் தனது காரை இயக்கியுள்ளார்.

ஆனால் வானத்தில் நம்பர் பிளேட் இல்லை என்பதால் காவல்துறையினரால் நிறுத்தப்பட்டுள்ளார். அப்போது, அவருக்கு ரூ.27 லட்சம் அபராதம் விதித்துள்ளதாக தகவல் தெரிவித்துள்ளார். இதை அம்மாநில போலீஸ் ஆணையர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்