15 ஆண்களை திருமணம் செய்து ஏமாற்றிய உல்லாச அழகி!!! பல லட்சங்கள் அபேஸ்!

சனி, 2 பிப்ரவரி 2019 (08:04 IST)
15 ஆண்களை ஏமாற்றி திருமணம் செய்த உல்லாச அழகியை போலீஸார் தேடி வருகின்றனர்.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை சேர்ந்தவர் உதயகுமார். இவருக்கு ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து ஆன நிலையில் 2017 ஆம் ஆண்டு மகாலட்சுமி என்ற பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். திருமணம் முடிந்த சில நாட்களிலேயே உதயகுமார் வேலைகாக சிங்கப்பூர் சென்றுள்ளார்.
 
மகாலட்சுமி மன்னார்குடியில் உள்ள வீட்டில் இருந்துள்ளார். மகாலட்சுமிக்கு அவ்வப்போது பணம் அனுப்பியுள்ளார். சமீபத்தில் உதயகுமாருக்கு போன் செய்த மகாலட்சுமி தாம் கர்ப்பமாக உள்ளதாக கூறியுள்ளார். இதனால் சந்தோஷமடைந்த உதயகுமார், மகாலட்சுமியை பார்க்க சொந்த ஊருக்கு வந்தார். ஆனால் வீடு பூட்டப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
 
மனைவிக்கு போன் செய்தால் சுவிட்ச் ஆப். குழம்பிப் போய் உட்கார்ந்த உதயகுமார் என்ன செய்வதென்றே தெரியாமல் திகைத்தார். பின்னர் மனைவியின் ஃபேஸ்புக் அக்கவுண்டை பார்த்தபோது பல அதிர்ச்சி தகவல்கள், அதில் அவர் பல்வேறு ஆண்களுடன் திருமண கோலத்தில் இருந்ததும், பலருடன் நெருக்கமாக இருந்த போட்டோவையும் பார்த்து அதிர்ச்சியடைந்தார்.
 
உடனடியாக காவல் நிலையத்திற்கு சென்ற இவர், மகாலட்சுமி என்ற பெண் என்னை ஏமாற்றி 25 பவுன் நகை, 5 லட்சம் ரூபாயை ஏமாற்றிவிட்டு சென்றதாக புகார் அளித்துள்ளார். அந்த நபர் அளித்த புகாரின் பேரில் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்