ஜெகனுக்கு உள்ள தைரியம் எடப்பாடி பழனிசாமிக்கு இல்லை! – துரைமுருகன் காட்டம்!

Webdunia
வியாழன், 9 ஜனவரி 2020 (15:24 IST)
குடியுரிமை சட்டத்துக்கு எதிரான தீர்மானம் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படாததை கண்டித்து திமுக்வினர் வெளிநடப்பு செய்துள்ளனர்.

மத்திய அரசின் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என திமுக கட்சி சார்பில் முக ஸ்டாலின் சட்டபேரவை செயளரை சந்தித்து மனு அளித்திருந்தார். சட்டப்பேரவை கூட்டம் தொடங்கிய நாள் முதலே மனு மீதான விவாதத்திற்கு நேரம் ஒதுக்க கோரி திமுகவினர் கேட்டு வந்தனர். ஆனால் மனு மீதான ஆய்வு நடைபெற்று வருவதாக சபாநாயகர் விளக்கமளித்தார்.

சட்டசபை கூட்ட தொடரின் கடைசி நாளான இன்றும் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக திமுக கொண்டு வந்த தீர்மானம் மீது விவாதிக்காமல் இருந்ததை திமுக உறுப்பினர்கள் கண்டித்து வெளிநடப்பு செய்துள்ளனர்.

இதுகுறித்து பேசிய திமுக பொருளாளர் துரை முருகன் குடியுரிமை சட்டத்திகு எதிராக தீர்மானம் கொண்டு வர இந்த அரசு அஞ்சுகிறது எனவும், ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி, மம்தா பானர்ஜி போன்றவர்களுக்கு உள்ள தைரியம் கூட அதிமுகவுக்கோ, எடப்பாடி பழனிசாமிக்கோ இல்லை எனவும் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்