மதுபானம் வீட்டுக்கே டெலிவரி....

Webdunia
செவ்வாய், 1 ஜூன் 2021 (15:35 IST)
வீட்டிற்கு மதுபானம் கொண்டு வந்து வழங்கும் வசதியை டெல்லி மாநில அரசு ஏற்பாடு செய்துள்ளது.

கொரோனா இரண்டாம் கட்ட அலை உலகம் முழுவதும் பரவி வருகிறது. இதில் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் மக்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழப்பும் அதிகரித்துவருகிறது.

இந்தக் கொரொனா தொற்றிற்கு சாதாரண மக்கள் முதல், அரசியல்தலைவர்கள், விளையாட்டு நட்சத்திரங்கள், சினிமா நடிகர், நடிகைகள் உள்ளிட்ட பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில்,  அனைத்து மாநிலங்களிலும் ஊரடங்கு அமலில் உள்ளதால் பொதுமக்கள் சிரமத்தில் உள்ளனர். இதைத் தவிர்க்கும் பொருட்டு அரசு மக்களின் தேவைகளைக் கருத்தில் கொண்டு சில நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.

அந்தவகையில், டெல்லி மாநிலத்தில் மதுப்பிரியர்களின் வசதிக்காக, ஆன்லைன் மற்றும் மொபைல் ஆப் வழியாக ஆர்டர் கொடுத்தால், வீட்டுக்கே டோர் டெலிவரி செய்ய டெல்லி அரசு  ஏற்பாடு செய்துள்ளது.  இதனால் மதுப்பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்