திருப்பதி மலை பாதையில் நடமாடிக் கொண்டிருந்த மூன்று சிறுத்தைகளை ஏற்கனவே வனத்துறையினர் பிடித்த நிலையில் தற்போது மீண்டும் சிறுத்தை மற்றும் கரடி நடமாட்டம் இருப்பதாகவும் இதனால் திருப்பதி மலைக்கு வரும் பக்தர்கள் மிகுந்த கவனத்துடன் வருகை தர வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
திருப்பதி மலை பாதையில் மீண்டும் சிறுத்தை, கரடு நடமாட்டம் உள்ளதால் பக்தர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் அலிபிரி மலை பாதையில் வைக்கப்பட்ட கண்காணிப்பு கேமராக்களில் கடந்த 24ஆம் தேதி முதல் 27ஆம் தேதி வரை பதிவான காட்சிகளில் சிறுத்தை மற்றும் கரடி நடமாட்டம் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
எனவே பக்தர்கள் தனியாக வர வேண்டாம் என்றும் குழுவாக, கூட்டம் கூட்டமாகவே மலைப்பாதையில் வர தேவஸ்தான அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்