செயற்கைக்கோள் உதவியுடன் இயங்கும் ஜியோ ஸ்பேஸ் பைபர் என்ற சேவையை ஜியோ நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள நிலையில் முதல் கட்டமாக நான்கு நகரங்களில் இந்த சேவையை அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இது குறித்த சிறப்பு நிகழ்ச்சி ஒன்று டெல்லியில் நடந்த நிலையில் இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டு இந்த சேவையை தொடங்கி வைத்தார். இந்தியாவின் முதல் முறையாக செயற்கைக்கோள் மூலம் இயங்கும் ஜியோ ஸ்பைஸ் பைபர் சேவை நாடு முழுவதும் விரைவில் கொண்டுவரப்பட திட்டமிடப்பட்டிருந்தாலும் தற்போது இந்தியாவின் நான்கு இடங்களில் மட்டும் சோதனை முறையில் இயங்கப்பட உள்ளது. அந்த இடங்கள் பின்வருமாறு
1. குஜராத்தின் கிர்
2. சத்தீஸ்கரின் கோர்பா
3. ஒடிசாவின் நப்ராங்பூர்
4. அசாமின் ONGC ஜோர்ஹத்
விரைவில் சென்னை உள்பட இந்தியாவின் பல பகுதிகளில் இந்த சேவை தொடங்கப்படும் என்று ஜியோ நிறுவனம் அறிவித்துள்ளது