வேகமாக பரவும் நிபா வைரஸ்.. கோழிக்கோடு பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு..!

Webdunia
புதன், 13 செப்டம்பர் 2023 (11:46 IST)
கேரளாவில் கோழிக்கோடு உள்ளிட்ட ஒரு சில பகுதிகளில் நிபா வைரஸ் வேகமாக பரவி வருவதை அடுத்து பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. 
 
கோழிக்கோடு பகுதியில் இதுவரை நான்கு பேருக்கு நிபா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து கேரள மாநில சுகாதாரத்துறை அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறது. 
 
குறிப்பாக கோழிக்கோடு பகுதிகளில் உள்ள ஏழு பஞ்சாயத்துகளில்  ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி பள்ளிகள் அங்கன்வாடிகளுக்கு  விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது
 
கேரளாவில் நிபா வைரஸ் பரவுவதை தடுப்பதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் நிலைமை கட்டுக்குள் இருப்பதாகவும் கேரள மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்