முன்னாள் தி.நகர் எம்.எல்.ஏ சத்யாவின் நண்பர் அலுவலகத்தில் ரெய்டு: லஞ்ச ஒழிப்பு துறையினர் அதிரடி..!

Webdunia
புதன், 13 செப்டம்பர் 2023 (11:41 IST)
அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. தி.நகர் சத்யா தொடர்புடைய 18 இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை செய்து வருகின்றனர் என்பதை பார்த்தோம்.
 
இந்த நிலையில் ஆரம்பாக்கத்தில் தி.நகர் சத்யாவின் நண்பர் திலீப்குமார் அலுவலகத்திலும் ரெய்டு நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
8 பேர் கொண்ட லஞ்ச ஒழிப்பு துறையினர் இன்று காலை 7 மணி முதல் ஆரம்பாக்கத்தில் தி.நகர் சத்யாவின் நண்பர் திலீப்குமார் அலுவலகத்தி சோதனை செய்து வருகின்றனர்.
 
திருவள்ளூர் லஞ்ச ஒழிப்புத்துறை ஆய்வாளர் தமிழரசி தலைமையிலான 8 பேர் கொண்ட குழு சோதனை செய்ததில் முக்கிய ஆவணங்கள் சிக்க வாய்ப்புள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தகவல்தெரிவித்துள்ளனர்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்