பிபின் ராவத் குறித்து சர்ச்சை கருத்து..! – கர்நாடகாவில் ஒருவர் கைது!

Webdunia
திங்கள், 13 டிசம்பர் 2021 (08:15 IST)
குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் இறந்த முப்படை தளபதி பிபின் ராவத் குறித்து சமூக வலைதளங்களில் சர்ச்சைக்குரிய வகையில் பதிவிட்டவர் கர்நாடகாவில் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த வாரம் குன்னூரில் ஏற்பட்ட ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் இந்தியாவின் முப்படை தளபதி பிபின் ராவத் உள்பட 13 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுகுறித்து ராணுவம் தீவிர விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் இந்த விபத்து குறித்து ஊகங்களை பரப்ப வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்பட்டது.

இந்நிலையில் மைசூரில் மருத்துவமனை ஒன்றில் லேப் டெக்னீசியனாக பணிபுரியும் நபர் ஒருவர் மறைந்த முப்படை தளபதி பிபின் ராவத் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். இதனால் அவரை போலீஸார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்