நோ மோர் அமித்ஷா! விரைவில் தலைமை பதவி ஏற்கும் முக்கிய ஒருவர்...

Webdunia
வியாழன், 16 ஜனவரி 2020 (14:21 IST)
பாஜக தேசிய தலைவராக ஜே.பி.நட்டா வரும் 22 ஆம் தேதி பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 
மத்தியில் ஆளும் தேதிய கட்சியான பாஜகவில் ஒருவருக்கு ஒரு பதவி மட்டுமே என்ற விதி பின்பற்றப்படுவதால், மத்திய உள்துறை அமைச்சராக பதவி வகித்து வரும் அமித்ஷா, கட்சித் தலைவராக தொடர்ந்து பதவி வகிக்க முடியாது.  
 
ஆனால், அமித்ஷா கடந்த சில மாதங்களாக இரு பதவிகளில் இருந்து வந்தார். எனவே, பாஜகவுக்கு புதிய தலைவரை நியமிக்க முடிவுசெய்யப்பட்டு தற்போது இது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. 
தகவலின் படி,  பாஜக தேசிய தலைவராக ஜே.பி.நட்டா வரும் 22 ஆம் தேதி பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே இவர் தான் தலைவராவர் என கூறப்பட்டு வந்த நிலையில் தற்போது வெளியாகியுள்ள இந்த தகவல் இதனை உறுதிப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது. 
 
ஜே.பி.நட்டா ஏற்கனவே மோடி அமைச்சரவையில் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. அதோடு, நட்டா பாஜக தேசிய தலைவராக தேர்வு செய்யப்பட்டாலும் அமித் ஷா அரசியல் மற்றும் தேர்தல் வியூகங்களை வகுப்பதில் முக்கிய பங்காற்றுவார் என கூறப்படுகிறது.  

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்