’காவி வள்ளுவர்’ போட்டோவை போட்ட வேகத்தில் தூக்கிய வெங்கையா நாயுடு!!

வியாழன், 16 ஜனவரி 2020 (10:58 IST)
திருவள்ளுவர் காவி உடையுடன் இருக்கும் படத்தை டிவிட்டரில் பகிர்ந்து மீண்டும் சர்ச்சையை கிளப்பியுள்ளார் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு. 
 
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் திருவள்ளுவர் படத்திற்கு காவி உடை அணிவித்து பாஜக கடும் சர்ச்சையை கிளப்பியது. இதனைத்தொடர்ந்து எதிர்கட்சிகள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்க தமிழகத்தில் இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதன் பின்னர் இதனால் ஏற்பட்ட பரபரப்பு சில நாட்களுக்கு பின்னரே ஓய்ந்தது. 
 
ஆனால் தற்போது இதை கிளறும் வகையில், குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு தனது டிவிட்டர் பக்கத்தில் போட்டுள்ள டிவிட் அமைந்திருக்கிறது. ஆம், அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் திருவள்ளுவர் காவி உடையுடன் இருக்கும் படத்தை பகிர்ந்து திருவள்ளுவரை புகழ்ந்துள்ளார். 
 
அவர் பதிவிட்டுள்ளதாவது, சிறந்த தமிழ் புலவரும், தத்துவவாதியும், ஞானியுமான திருவள்ளுவரை அவரது பிறந்தநாளில் நினைவு கூர்கிறேன். அவர் நமக்கு அளித்த திருக்குறள் இந்த உலகில் உன்னதமான வாழ்க்கையை வாழ்வதற்கு மனிதகுலத்திற்கு வழிகாட்டுகிறது என பதிவிட்டார். 
 
ஆனால் இதை எதிர்த்து சர்சைகள் கிளம்பியது, அட்தோடு டிவிட்டரில் #திருவள்ளுவர் என்ற ஹேஷ்டேக்கும் டிரெண்டான நிலையில் காவி உடையுடன் இருந்த திருவள்ளுவர் படத்தை ட்விட்டரில் இருந்து நீக்கியுள்ளார் குடியரசு  துணைத் தலைவர் வெங்கையா நாயுடு.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்