சந்திரயான் 3 நிலவில் இறங்கும் இடம் கணிக்கப்பட்டுள்ளது.. இஸ்ரோ விஞ்ஞானிகள் தகவல்..!

Webdunia
புதன், 23 ஆகஸ்ட் 2023 (11:26 IST)
இஸ்ரோ விஞ்ஞானிகள் அனுப்பிய சந்திரயான் 3  விண்கலம் இன்று நிலவில் தரை இறங்க இருக்கும் நிலையில் எந்த இடத்தில் நிலவில் விக்ரம் லேண்டர் தரை இறங்கும் என்ற இடம் தற்போது கணிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்
 
நிலவின் போகுஸ்லாவ்ஸ்கி மற்றும் மன்சினஸ் பள்ளத்தாக்கு அருகே விக்ரம் லேண்டர் தரையிறங்க வாய்ப்பு என்றும், இன்று மாலை 6.04 மணிக்கு நிலவில் தரை இறங்குகிறது சந்திரயான் 3 என்றும் இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்
 
நிலவின் தென் துருவத்தில் தடம் பதிக்க உள்ள முதல் நாடு இந்தியா என்ற பெருமை இன்று கிடைக்கவுள்ளது என்றும், இன்று மாலை 5.40 மணியில் இருந்து தரை இறங்கும் பணி துவக்கப்படும் என்றும் இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்
 
சந்திராயன் 3 விண்கலத்தில் உள்ள விக்ரம் லேண்டர் தரையிறங்குவதை காண நாடே ஆவலுடன் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்