சந்திரயான் 3: விக்ரம் லேண்டர் புதிய புகைப்படங்களை வெளியிட்டது இஸ்ரோ..!
திங்கள், 21 ஆகஸ்ட் 2023 (09:56 IST)
இஸ்ரோ அனுப்பிய சந்திரயான் 3 என்ற விண்கலம் வெற்றிகரமாக நிலவை நெருங்கி உள்ள நிலையில் நிலவை படம்பிடித்து அனுப்பி உள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
இந்திய விண்வெளி துறையின் சாதனையாக கருதப்படும் சந்திரயான் 3 சமீபத்தில் விண்ணில் ஏவப்பட்டது என்பது இந்த விண்கலம் பூமியின் சுற்றுப்பாதை மற்றும் நிலவின் சுற்றுப்பாதையை சரியாக அடைந்து நிலவை நெருங்கிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் சந்திரயான் 3விண்கலத்தில் அனுப்பப்பட்டிருந்த விக்ரம் லாண்டர் ஆகஸ்ட் 19ஆம் தேதி எடுத்த நிலவின் புதிய புகைப்படங்களை இஸ்ரோ வெளியிட்டுள்ளது.
மேலும் தரை இறங்குவதற்கு பாதுகாப்பான இடங்களை படம் பிடித்து விக்ரம் லேண்டர் அனுப்பி உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளன. ஆகஸ்ட் 23ஆம் தேதி அதாவது நாளை மறுநாள் மாலை 6.04 மணிக்கு விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்கும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.