இந்நிலையில் இன்று நிலவை சுற்றிவரும் லூனா-25-ன் சுற்றுவட்ட பாதையை குறைக்கும் முயற்சியில் ரஷ்யா ஈடுபட்டிருந்தது. அப்போது விண்கலத்திலிருந்து சிக்னல் கோளாறு ஏற்பட்டதாக செய்திகள் வெளியாகின. நீண்ட நேரம் முயற்சி செய்தும் லூனா-25-ஐ திரும்ப தொடர்பு கொள்ள முடியாத நிலையில் லூனா-25 நிலவில் மோதி இருக்கலாம் என நம்பப்படுகிறது. இதனால் லூனா-25 திட்டம் தோல்வி அடைந்ததாக ரஷ்யா தெரிவித்துள்ளது.
சுமார் 47 வருடங்கள் கழித்து நிலவு ஆராய்ச்சிக்காக லூனா-25 ஐ தயார் செய்த ரஷ்யா இதற்காக ரூ.1662 கோடியை செலவு செய்திருந்தது. லூனா-25 தோல்வியடைந்த நிலையில் தற்போது உலக விஞ்ஞானிகளின் கவனம் சந்திரயான் 3 பக்கம் திரும்பியுள்ளது. சந்திரயான் 3-ன் வெற்றிக்காக உலக நாடுகள் பெரும் ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றன.