உளவுத்துறை எச்சரிக்கை..! தலைமை தேர்தல் ஆணையருக்கு 'Z' பிரிவு பாதுகாப்பு..!!

Senthil Velan
செவ்வாய், 9 ஏப்ரல் 2024 (14:20 IST)
உளவுத்துறை எச்சரிக்கையை தொடர்ந்து இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமாருக்கு ‛இசட்’ பிரிவு பாதுகாப்பு வழங்க மத்திய உள்துறை அமைச்சகம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
 
நாடாளுமன்ற மக்களவைக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. அதன்படி  ஏப்ரல் 19 ம் தேதி முதல் ஜுன் 1ம் தேதி வரை மொத்தம் 7 கட்டங்களாக தேர்தல்  நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவான வாக்குகள் ஜூன் 4ம் தேதி எண்ணப்பட்டு, அன்றைய தினமே முடிவுகள் வெளியாகும்.
 
நாடு முழுவதும் தேர்தலுக்கான பணிகளில் இந்திய தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.  இந்நிலையில்  இந்திய தேர்தல் ஆணையர் ராஜீவ் குமாருக்கு ‛இசட்’ பிரிவு பாதுகாப்பு வழங்க மத்திய உள்துறை அமைச்சகம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

ALSO READ: கவிதாவுக்கு மேலும் 14 நாட்கள் காவல்..! ஏப். 23 வரை நீட்டித்து உத்தரவு..!!

தேர்தல் ஆணையர் ராஜீவ் குமாருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக மத்திய அரசிடம் உளவுத்துறை எச்சரிக்கை விடுத்ததாக சொல்லப்படுகிறது. இதை அடுத்து தேர்தல் ஆணையர் ராஜீவ் குமாருக்கு ‛இசட்’ பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்