18 வது மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி முதல் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுவதாகவும் மக்களவை தேர்தலோடு 4 மாநிலங்களுக்கான சட்டப்பேரவை தேர்தலும் நடைபெறும் என்றும் பதிவான வாக்குகள் ஜூன் 4 ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படும் என்றும் தமிழ் நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி தேர்தல் நடக்கிறது என்று தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் அறிவித்தார்.
நாடு முழுவதும் பாஜக, காங்கிரஸ், திமுக, அதிமுக, நாம் தமிழர் உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்
இன்று கன்னியாகுமரி தொகுதி வேட்பாளர் மரிய ஜெனிபரை ஆதரித்து சீமான் தேர்தல் பரப்புரை செய்தார். அப்போது அவர் கூறியதாவது: எங்கள் சின்னத்தைக் கூட ஒலிவாங்கி என்று கூறினால் மக்களுக்குப் புரியாத நிலை, மைக் என்று சொல்ல வேண்டியுள்ளது. எவ்வளவு அழுத்தங்கள் கொடுத்தாலும் அவர்கள் கொடுக்கும் அழுத்தங்கள் எங்களை ஆவேசப்படுத்துமே தவிர அச்சப்படுத்தாது. பல ஆண்டுகளாக நம் தமிழ்மொழி சிதைந்துகொண்டிருப்பதை பார்க்கிறோம் என்று கூறினார்.
காங்கிரஸ் மற்றும் பாஜக நம் மொழிக்காக, உரிமைக்காக நின்றுள்ளார்களா? இலங்கை கடற்படையினர் எத்தனை படகுகள் மற்றும் மீனவர்களை பிடித்துள்ளார்கள்? காங்கிரஸ் மற்றும் பாஜக அதற்கு ஒரு தீர்வு கொண்டு வந்ததுண்டா? என்று கேள்வி எழுப்பினார்.