மக்களவைத் தேர்தல் தொடர்பாக செய்தியாளிடம் பேசிய, தலைமை தேர்தல் ஆணையர் ராஜிவ் குமார், ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படுவதாக தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு ஏப்ரல் 19 ஆம் நடத்தப்படவுள்ளது என்றும் ஏப்ரல் 19, 26, மே 7, 13, 20, 25 மற்றும் ஜூன் 1 என 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறும் என்றும் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தெரிவித்தார்.
அருணாசல பிரதேசம், அந்தமான் நிகோபர் தீவுகள், ஆந்திரா, சண்டிகர், தாதா நாகர் மற்றும் ஹவேலி, கோவா, டெல்லி, குஜராத், இமாசல பிரதேசம், அரியானா, கேரளா, லட்சத்தீவு, லடாக், மிசோரம், மேகாலயா, நாகலாந்து, புதுச்சேரி, சிக்கிம், தமிழ்நாடு, பஞ்சாப், தெலங்கானா, உத்தரகாண்ட் ஆகிய 22 மாநிலங்களில் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளதாக அவர் தெரிவித்தார்
கர்நாடகா, ராஜஸ்தான், திரிபுரா, மணிப்பூரில் 2 கட்டங்களாகவும், சட்டீஸ்கர், அசாமில் 3 கட்டங்களாகவும், ஒடிசா, மத்தியபிரதேசம், ஜார்க்கண்ட்டில் 4 கட்டங்களாகவும், மகாராஷ்டிரா, ஜம்மு காஷ்மீரில் 5 கட்டங்களாகவும் வாக்குப்பதிவு நடைபெறும் என்று அவர் கூறினார்.
உத்தரப்பிரதேசம், பீகார், மேற்கு வங்கத்தில் 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடத்தப்படவுள்ளது. என்று தேர்தல் ஆணையர் ராஜிவ் குமார் தெரிவித்தார். ஜூன் 4-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று, தேர்தல் முடிவுகள் வெளியாகும்.