இண்டிகோ விமான நிறுவனத்தின் சர்வர்கள் ஹேக்கிங்: அதிகாரிகள் விளக்கம்

Webdunia
வெள்ளி, 1 ஜனவரி 2021 (07:44 IST)
இண்டிகோ விமான நிறுவனத்தின் சர்வர்கள் ஹேக்கிங்
இந்தியாவின் முன்னணி விமான நிறுவனங்களில் ஒன்றான இண்டிகோ விமான நிறுவனத்தின் சர்வர்கள் செய்யப்பட்டுள்ளதாக வெளிவந்துள்ள தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
 
டிசம்பர் மாத தொடக்கத்தில் தங்கள் நிறுவனத்தின் சர்வர்கள் ஹேக் செய்யப்பட்டதாகவும் ஆனால் நிலைமையின் விபரீதத்தை உணர்ந்து இண்டிகோ விமான நிறுவன அதிகாரிகள் அந்த சர்வரை தற்போது மீட்டு விட்டதாகவும் அறிக்கை ஒன்றின் மூலம் இண்டிகோ விமான போக்குவரத்து நிறுவனம் தெரிவித்துள்ளது 
 
டிசம்பர் மாதம் தங்களுடைய சிஸ்டம் ஹேக் செய்யப்பட்டு விட்டதாகவும் ஆனால் இதுகுறித்த நிலைமையின் தீவிரத்தை உணர்ந்ததும் அதிகாரிகள் அதிரடியாக நடவடிக்கை எடுத்து மீட்டு விட்டதாகவும் இதில் சில முக்கிய ஆவணங்களும் இருந்ததாகவும் பொதுவில் வைக்க முடியாத அந்த ஆவணங்களை ஹேக்கர்கள் ஹேக் செய்தபோதிலும் தங்கள் நிறுவன அதிகாரிகள் திறமையுடன் செயல்பட்டு அந்த சர்வரை உடனடியாக மீட்டு விட்டதாகவும் எனவே எந்தவித பிரச்சனையும் இன்றி இண்டிகோ நிறுவனத்தின் விமான போக்குவரத்து நிறுவனம் இயங்கும் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது 
 
முன்னணி விமான நிறுவனம் ஒன்றின் முக்கிய ஆவணங்களை கையாளும் சர்வர்கள் ஹேக்கர்களால் ஹேக் செய்யப்பட்ட தகவல் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்