கொரோனா ஆய்வு தகவலை திருட முயற்சி: இந்தியாவுக்கு எச்சரிக்கை விடுத்த மைக்ரோசாப்ட்

செவ்வாய், 17 நவம்பர் 2020 (20:07 IST)
இந்தியா உள்பட பல்வேறு நாடுகளில் கொரோனா தடுப்பூசி ஆராய்ச்சிகள் நடைபெற்று கொண்டிருக்கும் நிலையில் இந்தியாவில் கொரோனா தடுப்பூசி ஆராய்ச்சி தகவல்களை திருட முயற்சி நடப்பதாக மைக்ரோசாப்ட் எச்சரித்துள்ளது 
 
இதுகுறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் ’ரஷ்யா மற்றும் வட கொரியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த ஹேக்கர்கள் இந்தியர்களின் கொரோனா தடுப்பூசி ஆராய்ச்சி தகவல்களை திருட முயற்சிப்பதாகவும் சைபர் தாக்குதல் மூலம் அந்த தகவல்களை திருட திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது 
 
எனவே கொரோனா ஆராய்ச்சி தடுப்பு நிறுவனங்கள் ஹேக்கர்களிடம் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பூசி ஆராய்ச்சி நிறுவனங்களின் பாஸ்வேர்டை திருட ரஷ்யாவின் ஒரு ஹேக்கிங் நிறுவனமும் வட கொரியாவின் ஒரு ஹேக்கிங் நிறுவனமும் ஏற்கனவே 3 முறை முயற்சித்துள்ளதாக மைக்ரோசாப்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்