விமானத்தில் பிறந்த குழந்தை… வாழ்நாள் முழுவதும் இலவசப் பயணம்!

வெள்ளி, 9 அக்டோபர் 2020 (09:37 IST)
டெல்லியில் இருந்து பெங்களூர் சென்ற விமானத்தில் குழந்தை ஒன்று பிறந்ததை அடுத்து விமான நிறுவனம் அந்த குழந்தைக்கு வாழ்நாள் பயண சலுகை வழங்கியுள்ளது.

டெல்லியில் இருந்து பெங்களூரு நோக்கி இண்டிகோவின் 6E 122 விமானம் வானில் பறக்கும் போது அந்த விமானத்தில் பயணம் மேற்கொண்ட கர்ப்பினி பெண் ஒருவருக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அங்கிருந்த விமானப் பணிப்பெண்களின் உதவியோடு அவருக்கு பிரசவம் நடந்துள்ளது. அதில் அவருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இப்போது தாயும் குழந்தையும் நலமாக இருக்கிறார்கள்.

இதையடுத்து இண்டிகோ நிறுவனம் அந்த குழந்தை தங்கள் விமானத்தில் பிறந்ததால் வாழ்நாள் முழுவதும் தங்கள் விமானங்களில் செல்ல சலுகை வழங்கியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்