பாரதப் பிரதமர் மோடியை நாட்டு மக்கள் கடவுளாகத்தான் பார்க்கின்றனர்- பாஜக மாநிலத் துணைத் தலைவர் கரு நாகராஜன்!

J.Durai
வியாழன், 23 மே 2024 (17:29 IST)
சிவகங்கை மாவட்டம் கல்லல் அருகே நடைபெற்ற வடமாடு மஞ்சுவிரட்டு போட்டியை துவக்கி வைத்த பாரதிய ஜனதா கட்சியின் துணைத்தலைவர் கருநாகராஜன் இதனை தொடர்ந்து செய்தியாளர்களை  சந்தித்து பேசினார்.
 
நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவிற்கு வெற்றி வாய்ப்பில் பிரச்சனை இல்லை என்றவர், எதிர்க்கட்சிகளிடத்தில் குழப்பமும் பதட்டமும் நிலவுகிறது என்றார். 
 
மேலும் காங்கிரஸ் கட்சி ஏற்கனவே பெற்ற இடங்களை கூட இத்தேர்தலில் பெற இயலாது என கணித்தவர்,பாரதப் பிரதமர் மோடியை கடவுளாகத்தான் நாட்டு மக்கள் பார்க்கின்றனர்
 
 பிரதமர் மோடியின் பேச்சை தவறாக புரிந்து கொண்டு, சுயநல அரசியலுக்காக முதல்வர் பேசுகிறார் என கரு நாகராஜன்  தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்