இனிமேல் மோடி தான் பிரதமர் என எப்படி சொல்வார் பிரசாந்த் கிஷோர்? சரவணன் அண்ணாதுரை

Mahendran

வியாழன், 23 மே 2024 (11:42 IST)
மோடி தான் மீண்டும் பிரதமர் ஆவார் என்றும் பாரதிய ஜனதா கட்சி 300 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறும் என்றும் பிரசாந்த் கிஷோர் கடந்த சில நாட்களாக பேட்டியளித்து கொண்டிருக்கும் நிலையில் இது குறித்து திமுக பிரமுகர் சரவணன் அண்ணாதுரை தனது சமூக வலைத்தளத்தில் கேள்வி எழுப்பி உள்ளார்.

இந்தியாவில் தற்போது பாராளுமன்ற தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் ஜூன் நான்காம் தேதி வெற்றி பெறும் கட்சி எது என்பது தெரிய வந்துவிடும்.  இந்த நிலையில் இந்தியா கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்று ஒரு சில அரசியல் விமர்சிகர்களும் பிரசாந்த் கிஷோர் போன்ற விமர்சகர்கள் பாஜக மீண்டும் வெற்றி பெறும் என்றும் கூறி வருகின்றன.

இந்த நிலையில் பிரசாந்த் கிஷோரை பேட்டி ஒன்றில் மடக்கிய பத்திரிகையாளர் ஒருவரின் வீடியோவை தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு செய்துள்ள திமுக பிரமுகர் சரவணன் அண்ணாதுரை கூறி இருப்பதாவது

கரண் தாபர் அவர்களால் கிழித்து தொங்கவிடப்பட்ட பிரஷாந்த் கிஷோர். இனி எங்கேயும் சென்று பாஜக 300 இடங்களில் வெல்லும், மோடி தான் அடுத்த பிரதமர் என சொல்லுவாரா பார்ப்போம்.  “கோடி மீடியா” என ஏன் சொல்கிறோம்? இப்படியொரு கேள்வியை 300 இடங்கள் என்னும் பொழுது கேட்டார்களா

Edited by Mahendran
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்