பாஜகவுக்கு எதிராக பேசினால் கைது நடவடிக்கை.! அரவிந்த் கெஜ்ரிவால் குற்றச்சாட்டு..!!

Senthil Velan

புதன், 22 மே 2024 (18:52 IST)
பாஜக தலைமையிலான மத்திய அரசுக்கு எதிராக பேசினால் கைது செய்கிறார்கள் என டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டியுள்ளார்.
 
 
டெல்லியில் பேசிய அவர், மக்களவைத் தேர்தலுக்கு பிறகு தன்னை கைது செய்ய திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார்.  ஹேமந்த் சோரன், மணீஷ் சிசோடியா, சத்யேந்தர் ஜெயின், சஞ்சய் சிங் உள்ளிட்ட பல எதிர்க்கட்சி தலைவர்களை கைது செய்துள்ளனர் என்றும் பாஜக தலைமையிலான மத்திய அரசுக்கு எதிராக குரல் எழுப்புபவர்களை கைது செய்கிறார்கள் என்றும் அவர் புகார் தெரிவித்தார்.
 
கேரள முதல்வர் பினராயி விஜயன் மற்றும் முன்னாள் பீஹார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் மீது பல வழக்குகளை பதிவு செய்துள்ளனர் என தெரிவித்த கெஜ்ரிவால், அவர்களை எப்போது வேண்டுமானாலும் சிறையில் அடைக்கலாம் என்று கூறினார்.

ALSO READ: சமூகத்தை பிளவுபடுத்தும் பிரச்சாரத்தை நிறுத்துங்கள்.! பாஜக - காங்கிரசுக்கு தேர்தல் ஆணையம் கண்டனம்..!!
 
பாகிஸ்தானில் இம்ரான் கான் சிறையில் அடைக்கப்பட்ட அதே நிலைதான், தற்போது இந்தியாவிலும் ஏற்பட வாய்ப்புள்ளது என்று அரவிந்த் கெஜ்ரிவால் விமர்சித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்