அதிகரிக்கும் நிலக்கரி தட்டுப்பாடு! – இருளில் மூழ்கும் அபாயத்தில் மாநிலங்கள்!

Webdunia
ஞாயிறு, 10 அக்டோபர் 2021 (09:49 IST)
இந்தியா முழுவதும் நிலக்கரி உற்பத்தியில் தட்டுப்பாடு எழுந்துள்ளதால் மின்உற்பத்தி பாதிக்கும் அபாயம் எழுந்துள்ளது.

இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்கள் மின்சாரம் தயாரிக்க அனல்மின்நிலையங்களையே நம்பி இருந்து வருகிறது. இந்த அனல்மின் நிலையங்களில் மின்சாரம் தயாரிக்க நிலக்கரியே முக்கிய மூலப்பொருளாக உள்ளது. இந்நிலையில் நாடு முழுவதும் நிலக்கரிக்கு தட்டுப்பாடு எழுந்துள்ளது.

இதனால் டெல்லி, ராஜஸ்தான், ஆந்திரா, பஞ்சாப், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்கள் இருளில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. டெல்லியில் மின் உற்பத்தி நிலையங்களுக்கு நிலக்கரிக்கு பதிலாக தேவையான அளவு காஸ் சிலிண்டர் வழங்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்