’டாக்டர் ’படம் எப்படி இருக்கு? இயக்குநர் ஷங்கர் டுவீட்

சனி, 9 அக்டோபர் 2021 (22:57 IST)
தமிழ் சினிமாவில் இளம் நடிகர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள படம் டாக்டர். இப்படத்தை திலீப்குமார் இயக்கியுள்ளார்.

இந்நிலையில் இப்படத்தைப் பார்த்த இயக்குநர் ஷங்கர் பாராட்டியுள்ளார்.

இதுகுறித்த அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், இந்தக் கொரொனா காலத்தில் மிகச்சிறந்த நகைச்சுவை மருந்தாக உள்ளது. இப்படத்தைக் கொடுத்த இயக்குநர் திலீப்குமார் மற்றும்  சிவகார்த்திகேயன், அனிருத் உள்ளிட்ட டாக்டர் படக்குழுவுக்கு வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.  

இதற்கு இயக்குநர் ஷங்கருக்கு திலீப்குமார் நன்றி தெரிவித்துள்ளார்.

Siirrrrrr thankkkk u soo muchhh for ur kind words, means a lot coming from u... glad u enjoyed the film sir,such a boost up for us

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்