உன் மனைவி என்கிட்ட பேசலைனா.. வீடியோவை ஷேர் பண்ணிடுவேன்! – கணவனை மிரட்டிய டிரைவர்!

Webdunia
ஞாயிறு, 10 அக்டோபர் 2021 (09:34 IST)
சென்னையில் இளம்பெண்ணுடன் தகாத உறவில் இருந்த டிரைவர் பெண்ணின் கணவனை வீடியோவை காட்டி மிரட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொல்கத்தாவை சேர்ந்த 31 வயது பெண் ஒருவர் தனது மனநலம் பாதிக்கப்பட்ட மகனுக்கு சிகிச்சை அளிப்பதற்காக சென்னையில் தங்கி இருந்துள்ளார். இவரது கணவன் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் சில மாதங்கள் முன்னதாக உறவினர் திருமணத்திற்காக கொல்கத்தா சென்ற பெண்ணுக்கு சகாபுதீன் என்ற டிரைவர் பழக்கமாகியுள்ளார்.

பின்னர் அவரிடம் அன்பாக பேசிய டிரைவர் சென்னைக்கு வந்து பெண்ணுடன் அடிக்கடி உல்லாசமாக இருந்து வந்துள்ளார். பின்னர் அதை வீடியோ எடுத்து வைத்துக் கொண்டு பணம், நகை கேட்டு மிரட்டியுள்ளார். இதனால் அவரது எண்ணை அந்த பெண் ப்ளாக் செய்துள்ளார். இதனால் அந்த வீடியோவை வெளிநாட்டில் உள்ள அவளது கணவனுக்கு அனுப்பி பணம் கேட்டு மிரட்டியுள்ளார். இதனால் கணவன் – மனைவி இடையே எழுந்த பிரச்சினையால் அவர்கள் இருவரும் பிரிந்துவிட்டனர். இந்நிலையில் அந்த டிரைவர் தொடர்ந்து மிரட்டி வந்ததால் இதுகுறித்து சென்னை அண்ணா நகர் காவல்நிலையத்தில் அந்த பெண் புகார் அளித்துள்ளார். அதை தொடர்ந்து போலீஸார் சகாபுதீனை கைது செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்