மகாராஷ்டிர மாநிலத்தில் துணை முதலமைச்சராக பதவி வகிக்கும் அஜித் பவார் என்பவர் வீட்டில் திடீரென வருமான வரித்துறை சோதனை நடந்து வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
மகாராஷ்டிரா மாநிலத்தில் சிவசேனா தலைமையிலான கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் அம்மாநிலத்தில் முதலமைச்சராக உத்தவ் தாக்கரே அவர்களும் துணை முதலமைச்சராக அஜித் பவார் அவர்களும் பதவியேற்று செயல்பட்டு வருகின்றனர்
இந்த நிலையில் திடீரென இன்று அதிகாலை மகாராஷ்டிர மாநில துணை முதலமைச்சர் அஜித் பவார் வீட்டில் வருமான வரி சோதனை நடைபெற்று வருவதாக தகவல் வெளிவந்துள்ளது
இந்த தகவல் காரணமாக மகாராஷ்டிர மாநிலத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. துணை முதலமைச்சர் வீட்டிலேயே வருமான வரி சோதனை நடப்பதால் உத்தவ் தாக்கரே தலைமையிலான அரசு ஆட்டம் கண்டு உள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்து வருகின்றனர்