உறியடி திருவிழா நடத்தக்கூடாது; உத்தவ் தாக்கரே உத்தரவு – பாஜக எதிர்ப்பு!

செவ்வாய், 24 ஆகஸ்ட் 2021 (08:26 IST)
மகாராஷ்டிராவில் கொரோனா பரவலை கருத்தில் கொண்டு உறியடி திருவிழா நடத்த வேண்டாம் என உத்தவ் தாக்கரே உத்தரவிட்டுள்ளார்.

இந்தியா முழுவதும் கொரோனா பரவல் குறைந்துள்ள நிலையில் மூன்றாம் அலை பரவுவதற்கான வாய்ப்புள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மகாராஷ்டிராவில் கிருஷ்ண ஜெயந்தியன்று அதை கொண்டாடும் விதமாக தஹி ஹண்டி என்ற உறியடி திருவிழா பிரம்மாண்டமாக நடைபெறும்.

ஆனால் தற்போது கொரோனா பரவல் அதிகரிப்பதை கருத்தில் கொண்டு தஹி ஹண்டி கொண்டாட வேண்டாம் என மராட்டிய முதல்வர் உத்தவ் தாக்கரே உத்தரவிட்டுள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள பாஜகவினர் இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தியவர்கள் மட்டும் கலந்து கொள்ளும் விதமான கட்டுப்பாடுகளோடு தஹி ஹண்டி கொண்டாட அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்