ஜியோ இணையத்தில் இருந்து ஜியோபோன் நெக்ஸ்ட் வாங்குவது எப்படி?

Webdunia
வியாழன், 4 நவம்பர் 2021 (13:27 IST)
இன்று ஜியோ போன் நெக்ஸ் ரிலீஸாகியுள்ள நிலையில் ஜியோ ஸ்டோர்களில் ஜியோபோன் எப்படி வாங்க வேண்டும் என்பதை பார்ப்போம். jio.com என்ற இணையதளம் சென்று அதில் இருந்து ஜியோ போனை வாங்குவது எப்படி என்பதை பார்ப்போம்
 
முதலில் ஜியோவின் அதிகாரபூர்வமான இணையத்தளமான, jio.com தளத்துக்கு சென்று. மேற்புறத்தில் இருக்கும் JioPhone Next என்பதை கிளிக் செய்ய வேண்டும். அதன்பின்னர் I am interested” என்பதை கிளிக் செய்து, உங்கள் பெயர் மற்றும் மொபைல் எண்ணை பதிவு செய்ய வேண்டும்
 
மேலும் அதில் கூறியுள்ள  விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ளவும். அதன்பின் உங்கள் தனிப்பட்ட தகவலான, அஞ்சல் குறியீடு, நீங்கள் வசிக்கும் இடம் ஆகிய விவரங்களை பதிவ் உசெய்ய வேண்டும்
 
மேற்கூறிய தகவல்களை நீங்கள் பதிவு செய்த பிறகு, உங்களுக்கு மொபைல் எண்ணுக்கு ஒரு SMS வரும். உங்கள் அருகில் உள்ள ஸ்டோரில் JioPhone Next ஸ்டாக் வந்தவுடன் உங்களுக்கான நோட்டிஃபிக்கேஷன் வரும் என்று அந்த SMS இல் இருக்கும்.
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்