கால்பந்து மைதானத்தில் சுருண்டு விழுந்த பார்சிலோனா வீரர்! – ரசிகர்கள் அதிர்ச்சி!

திங்கள், 1 நவம்பர் 2021 (10:47 IST)
பிரபலமான லா லிகா போட்டியில் விளையாடி வந்த பார்சிலோனா வீரர் ஆட்டத்தின் நடுவே சுருண்டு விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கால்பந்து போட்டியில் பிரபலமான நாடுகளின் ஒன்றான ஸ்பெயினில் ஆண்டுதோறும் நடைபெறும் லா லிகா போட்டிகள் தொடங்கி நடந்து வருகின்றன. கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாய் பார்சிலோனா அணிக்காக லியோனல் மெஸ்சி விளையாடி வந்த நிலையில், முதன்முறையாக மெஸ்சி இல்லாமல் லா லிகாவில் பார்சிலோனா அணி பங்கேற்றுள்ளது.

இந்நிலையில் நேற்றைய ஆட்டத்தில் அலேவ்ஸ் அணியுடன் பார்சிலோனா மோதியது. இந்த ஆட்டம் 1-1 என்ற கணக்கில் ட்ரா ஆனது. இந்த ஆட்டத்தின்போது நன்றாக விளையாடி கொண்டிருந்த பார்சிலோனா அணி வீரர் செர்ஜியோ அகுரோ திடீரென நெஞ்சு வலியால் சுருண்டு மைதானத்திலேயே விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதை தொடர்ந்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு எழுந்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்