லாலு கட்சி எம்.எல்.ஏ நாக்கை அறுத்தால் ரூ.10 லட்சம்.. இந்துத்துவா அமைப்பு அறிவிப்பு..!

Siva
வியாழன், 4 ஜனவரி 2024 (14:26 IST)
லாலு கட்சி எம்எல்ஏ நாக்கை அறுத்தால் 10 லட்சம் ரூபாய் சம்பளம் வழங்கப்படும் என இந்துத்துவ அமைப்பு அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  

லாலு பிரசாத் கட்சியான ஆர்ஜேடி எம்.எல்.ஏ பகதூர் குஷ்வாஹா என்பவர் சரஸ்வதியின் பிறப்பு தொடர்பான  புராணங்களை சுட்டிக்காட்டி சரஸ்வதியை எப்படி வணங்க முடியும் என்று கூறினார்

மேலும் சரஸ்வதி குறித்து பாடங்களை பாட புத்தகங்களில் இருந்து நீக்க வேண்டும் என்று தெரிவித்தார். அதுமட்டுமின்றி லாலு பிரசாத் யாதவ் தான் எங்களுக்கு கடவுள் என்றும் ராமர் உள்பட அனைத்து கடவுள் கதாபாத்திரங்களும் கற்பனை என்றும் மூடநம்பிக்கை என்றும் கோவில்கள் அடிமை மனநிலையை வளர்த்திருப்பவை என்றும் தெரிவித்தார்.

இதனை அடுத்து பகதூர் குஷ்வாஹா எம்எல்ஏ நாக்கை அறுத்தால் 10 லட்சம் ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என இந்துத்துவ அமைப்புகளில் ஒன்றான இந்து சிவா பவானி சேனா என்ற அமைப்பு தெரிவித்துள்ளது.  இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்