நாட்டின் பிரதமர் மனைவி இல்லாமல் இருக்கக்கூடாது: லாலு பிரசாத் யாதவ் அறிவுரை..!

வெள்ளி, 7 ஜூலை 2023 (10:17 IST)
ஒரு நாட்டின் பிரதமர் மனைவி இல்லாமல் இருக்கக்கூடாது என பீகார் மாநில முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத் யாதவ் ராகுல் காந்திக்கு அறிவுரை தெரிவித்துள்ளார்.
 
2024 ஆம் ஆண்டு நடைபெறும் தேர்தலில் ராகுல் காந்தி பிரதமர் ஆவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து பாஜகவை எதிர்த்து போட்டியிட்டால் எதிர்க்கட்சிகள் கூட்டணியாக வெற்றி பெற வாய்ப்பு உண்டு என்றும் ராகுல் காந்தி பிரதமர் வேட்பாளராக தேர்வு செய்ய வாய்ப்புண்டு என்றும் கூறப்படுகிறது. 
 
இந்த நிலையில் ஒரு நாட்டின் பிரதமராக இருக்கக்கூடியவர் மனைவி இல்லாமல் இருக்கக்கூடாது என்றும் பிரதமர் இல்லத்தில் மனைவி இல்லாமல் தங்குவது தவறு என்றும் ராகுல் காந்திக்கு தலைவர் லாலு பிரசாத் அறிவுரை கூறியுள்ளார்
 
ஏற்கனவே தற்போது பிரதமராக இருக்கும் மோடி மனைவி இல்லாமல் தான் பிரதமர் இல்லத்தில் உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்