அடுத்து ஒரு முதல்வரின் பயோபிக் தயார்… விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

சனி, 28 அக்டோபர் 2023 (13:58 IST)
பீஹார் முன்னாள் முதல்வரும் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் தலைவருமான லாலு பிரசாத் யாதவ் தீவன ஊழல் வழக்கில் சிக்கி 27 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றுள்ளார். சிறையில் அவருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதை அடுத்து அவர் ராஞ்சி மருத்துவமன, எய்ம்ஸ் மருத்துவமனைகளில் கடந்த ஓராண்டாக சிகிச்சைப் பெற்று வருகிறார்.

இந்நிலையில் இப்போது அவரின் பயோபிக் திரைப்படம் உருவாக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கான வேலைகள் கடந்த சில மாதங்களாகவே நடந்து வந்த நிலையில் இந்த படத்தை பிரகாஷ் ஜா தயாரிக்க உள்ளார் என்று சொல்லப்படுகிறது.

படத்தின் தயாரிப்புக்கு லாலு பிரசாத்தின் மகன் தேஜஸ்வி பிரசாத் நிதியுதவி செய்ய உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. படத்தில் லாலுவாக நடிக்கப் போவது யார் என்பது இன்னும் முடிவாகவில்லை. அதுபோல படத்தின் தொழில்நுட்பக் குழுவும் இன்னும் அறிவிக்கப்படவில்லை என சொல்லப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்