வேப்பிலை துளசியில் செய்த மாஸ்க்: உபி சன்னியாசியின் வீடியோ வைரல்!

Webdunia
திங்கள், 24 மே 2021 (09:28 IST)
வேப்பிலை துளசியில் செய்த மாஸ்க்: உபி சன்னியாசியின் வீடியோ வைரல்!
உத்தரபிரதேச மாநிலத்தில் சன்னியாசி ஒருவர் வேப்பிலை மற்றும் துளசியால் செய்யப்பட்ட மாஸ்க்கை அணிந்திருக்கும் வீடியோ ஒன்று இணையதளங்களில் வைரலாகி வருகிறது
 
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக அனைவரும் மாஸ்க் அணிய வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக தரமான மாஸ்க் பயன்படுத்த வேண்டும் என்றும் தரமற்ற மாஸ்க் கொரோனா வைரசை பாதுகாக்காது என்றும் மத்திய மாநில அரசுகள் தெரிவித்து வருகின்றன 
 
இந்த நிலையில் உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த சந்நியாசி ஒருவர் வேப்பிலை மற்றும் துளசி இலைகளால் செய்யப்பட்ட மாஸ்க்கை அணிந்திருக்கும் வீடியோ இணைய தளங்களில் பகிரப்பட்டு வருகிறது. உத்தரப் பிரதேச மாநிலத்திலுள்ள சித்தாபூர் என்ற மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஜூகாது பாபா. சன்னியாசியான இவர் நூலால் சுற்றப்பட்ட முகக்கவசம் ஒன்றை அணிந்து உள்ளார். அதில் வேப்பிலை மற்றும் துளசி இலைகளை வைத்து அதனை தனது முகத்தில் அணிந்துள்ளார் 
 
வேப்பிலை மற்றும் துளசி மருத்துவ குணம் வாய்ந்த இலைகள் என்பதால்  கொரோனா வைரஸிலிருந்து தன்னை முழுமையாக பாதுகாக்கும் என்று பாபா தெரிவித்துள்ளார். இதுகுறித்த வீடியோக்களை பெரும்பாலான நெட்டிசன்கள் வைரலாகி வருகின்றனர். ஆனால் இது எந்த அளவு வைரஸை கட்டுப்படுத்தும் என்பதை அரசுதான் ஆய்வு செய்து கூறவேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்