சர்ஜிக்கல் மாஸ்க்கை கட்டாயப்படுத்த வேண்டும்: பிரபல தயாரிப்பாளர் வேண்டுகோள்

வெள்ளி, 21 மே 2021 (09:28 IST)
mask
தமிழகத்தில் தினமும் கொரோனா வைரஸ் பாதிப்பு மிக அதிகமாகி வருகிறது என்பதும் நேற்று கூட தமிழகத்தில் 35 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் கொரோனா பாதிப்பில் இருந்து பொதுமக்கள் தங்களை காத்துக் கொள்ள பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து கொள்ள வேண்டும் என்றும் அவற்றில் ஒன்று கண்டிப்பாக மாஸ்க் அணிய வேண்டும் என்றும் கூறப்பட்டு வருகிறது 
 
ஆனால் அதே நேரத்தில் தரமான மாஸ்க் அணிந்தால் மட்டுமே அந்த மாஸ்க் பாதுகாப்பை ஏற்படுத்தும் என்றும் தரமற்ற மாஸ்குகள் அணிந்தும் பிரயோஜனம் இல்லை என்றும் கூறப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பிரபல தயாரிப்பாளர் எஸ்ஆர் பிரபு அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் சர்ஜிக்கல் மாஸ்க்கை கட்டாயப்படுத்த வேண்டும் என்று கூறியுள்ளார். அவர் இது குறித்து தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது:
 
முழு ஊரடங்கிற்குப் பின்னும் #கொரோனா குறையாமல் தொடர, மக்கள் துணியால் ஆன முகக்கவசம் மட்டுமே அணிவதை முக்கிய காரணமாக பார்க்கிறேன். துணி கவசம் 1% கூட வைரஸ் பரவலை தடுக்காது. சர்ஜிகல் மாஸ்க்-ஐ கட்டாயமாக்கலே இதற்கான தீர்வாக முடியும் என நம்புகிறேன். விலைக் கட்டுப்பாடும் அவசியம்’ என்று பதிவு செய்துள்ளார். இதுகுறித்து அரசு நடவடிக்கை எடுக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்பொம்.
 
 

முழு ஊரடங்கிற்குப் பின்னும் #கொரோனா குறையாமல் தொடர, மக்கள் துணியால் ஆன முகக்கவசம் மட்டுமே அணிவதை முக்கிய காரணமாக பார்க்கிறேன். துணி கவசம் 1% கூட வைரஸ் பரவலை தடுக்காது. சர்ஜிகல் மாஸ்க்-ஐ கட்டாயமாக்கலே இதற்கான தீர்வாக முடியும் என நம்புகிறேன். விலைக் கட்டுப்பாடும் அவசியம். #covid pic.twitter.com/w7UicoTaDL

— SR Prabhu (@prabhu_sr) May 21, 2021

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்