ஹெலிகாப்டர் விபத்தில் மம்தா பானர்ஜி காயம்.. விரைவில் குணமடைய முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து..!

Webdunia
புதன், 28 ஜூன் 2023 (07:32 IST)
மேற்குவங்க மாநிலத்தில் பஞ்சாயத்து தேர்தல் பிரச்சாரங்களுக்காக பிரச்சாரம் செய்ய ஹெலிகாப்டரில் முதல்வர் மம்தா பானர்ஜி சென்று கொண்டிருந்தபோது திடீரென கனமழை பெய்ததால் அவசரமாக தரையிறக்கப்பட்டது. 
 
அப்போது மம்தா பானர்ஜிக்கு காயம் ஏற்பட்டதாக தெரிகிறது. இதனை அடுத்து உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அவர்  அழைத்துச் செல்லப்பட்டார்
 
அங்கு அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்த மருத்துவர்கள் இடது முழங்கால் மற்றும் இடுப்பு பகுதியில் காயம் இருப்பதை கண்டறிந்து அதற்கான சிகிச்சை அளித்து வருகின்றனர். 
 
இந்த நிலையில் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் உடல் நிலையை கேள்விப்பட்டு கவலை அடைந்துள்ளதாகவும் அவர் விரைவில் குணமடைந்து நலமுடன் திரும்ப விரும்புகிறேன் என்றும் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்