’இன்னும் என்ன தூக்கம்?’ மாணவர்களை அதிகாலை எழுப்ப அரசு செய்த ஐடியா!

Webdunia
திங்கள், 26 டிசம்பர் 2022 (13:18 IST)
பள்ளி பொதுத்தேர்வுகள் நெருங்கி வரும் நிலையில் மாணவர்களை அதிகாலையே விழிக்க செய்ய ஹரியானா அரசு புதிய முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.

ஜனவரி மாதம் தொடங்க சில தினங்களே உள்ள நிலையில் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு இப்போதே தேர்வு ஜுரம் தொற்றிக் கொள்ள தொடங்கியுள்ளது. மார்ச், ஏப்ரல் மாதங்களில் பொதுத்தேர்வுகள் தொடங்கி விடும் என்பதால் பள்ளிகளும் மாணவர்களுக்கான பாடங்களை நடத்தி முடிப்பது, திருப்புதல் தேர்வு என தயாராகி வருகிறது.

மாணவர்கள் விடியற்காலையிலேயே எழுந்து படித்தால் பாடம் எளிதில் புரியும் என்றும், அந்த அமைதியான சூழல் படிக்க ஏதுவாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. இதனால் ஹரியானா அரசு மாணவர்களை விடியற்காலையிலேயே எழுப்ப புதிய வழிமுறையை கைக்கொண்டுள்ளது.

அதன்படி, அனைத்து மத வழிபாட்டு தலங்களிடமும் அதிகாலை 4.30 மணிக்கு மாணவர்கள் எழுந்திருக்கும்படி ஒலிப்பெருக்கிகளில் ஒலி எழுப்புமாறு கேட்டுக்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் மாணவர்கள் விடியற்காலையே எழுந்து விட்டார்களா என்பதை வாட்ஸப் மூலம் வருகை பதிவு செய்து உறுதி செய்ய ஆசிரியர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாம்.

Edit By Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்