கிறிஸ்துமஸ் தினத்தில் மரண தண்டனை: சவுதி அரேபியாவுக்கு இங்கிலாந்து கண்டனம்!

Webdunia
திங்கள், 26 டிசம்பர் 2022 (13:02 IST)
உலகமே கிறிஸ்மஸ் தினத்தை கொண்டாடிய நிலையில் சவுதி அரேபியா ரகசியமாக மரண தண்டனையை நிறைவேற்றி உள்ளதாக இங்கிலாந்து எம் பிக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். 
 
உலக கோப்பை கால்பந்து போட்டியை உலகமே ஆர்வத்துடன் பார்த்துக் கொண்டிருந்த நிலையில் சவுதி அரேபியா 20 பேருக்கு மரண தண்டனை விதித்து விட்டதாகவும் அதில் 12 பேர் வெளிநாட்டவர் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். 
 
அதேபோல் தற்போது உலகமே கிறிஸ்மஸ் தினத்தைக் கொண்டாடி வரும் நிலையில் சவுதி அரேபியா நாட்டில் அவர் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக இது குறித்து தங்கள் கண்டனத்தை தெரிவித்துக் கொள்வதாகவும் இங்கிலாந்து எம்பிக்கள் குழு சவுதி அரேபியா வெளியுறவுத் துறை செயலாளருக்கு கடிதம் எழுதியுள்ளது 
 
சவுதி அரேபியா தங்கள் தவறுகளை மறைப்பதற்காக உலக மக்களின் கவனம் வேறு திசையில் இருக்கும் நேரத்தில் மரண தண்டனையை நிறைவேற்றியுள்ளனர் என்றும் இது கண்டனத்துக்குரியது என்றும் இங்கிலாந்து எம்பிக்கள் தெரிவித்துள்ளனர். இந்த தகவல் பரபரப்பை ஏற்படுத்திஉள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்