கல்லூரிகளில் செல்போனுக்கு தடை : அரசு அதிரடி ...மாணவர்கள் அதிர்ச்சி !

Webdunia
வெள்ளி, 18 அக்டோபர் 2019 (19:07 IST)
உத்தரபிரதேச மாநில மாநிலத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இங்குஉள்ள பல்கலைக் கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் இனிமேல் மாணவர்கள் செல்போன் பயன்படுத்த கூடாது என அரசு அதிரடி உத்தவிட்டுள்ளது.
இதுகுறித்து அம்மாநில உயர்கல்வி இயக்குநரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது :
 
மாநிலத்தில் உள்ள அனைத்து பல்கலை கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் படித்து வருகின்ற மாணவர்கள் படிக்கும் நேரத்தில் மொபைல் போன்களை பார்த்து கவனத்தை சிதறவிடுவதை அரசு கவனித்து வந்த நிலையில்,  நல்ல கற்பித்தலை உறுதி செய்ய வேண்டி செல்போனுக்கு தடை விதிப்பதாக தெரிவித்துள்ளனர்.
மாநில அரசின் இந்த புதிய உத்தரவால் கல்லூரி மாணவியர்கள் செல்போன் இல்லாமல் எப்படி நாட்கள் நகரும் என புலம்பி வருகின்றனர். ஆனால் அரசின் உத்தரவை மதித்துத்தானே ஆக வேண்டுமெனவும் ஒருசாரார் கருத்து தெரிவித்து முதல்வரின் உத்தரவுக்கு வரவேற்பும் பாராட்டும் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்