உத்தரபிரதேச மாநிலத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பசுக்களை பாதுகாப்பில் அலட்சியமாக இருந்ததாக மகராஜ்ஞ்சி என்ற மாவட்ட ஆட்சியர் சஸ்பெண்ட் செய்யபடுள்ளார்,சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் மகராஞ்கஞ்ச் மாவட்டத்தில் உள்ள மத்வாலியா பகுதியில் சுமார் 2500 மாடுகள் இருந்ததாகத் தெரிகிறது. ஆனால் அங்கு சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் 954 பசுக்கள் மட்டுமே இருந்ததைக் கண்ட அதிகார்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் மாநில தலைமை அமைச்சர் திவாரி மற்ற பசுக்கள் எங்கே என அதிகாரிகளுக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.