இந்த வருடத்தில் மட்டும் எத்தனை முறை சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டது?

Webdunia
செவ்வாய், 15 டிசம்பர் 2020 (13:32 IST)
இந்த வருடத்தில் மட்டும் ஐந்து முறை சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. 

 
மத்திய அரசின் அறிவுறுத்தல்படி மாதம்தோறும் சிலிண்டர் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த டிசம்பர் மாதத்திற்கு வீட்டு உபயோகத்திற்கான சிலிண்டர் விலை ரூ.50 உயர்ந்து ரூ.660 ஆக விலை நிர்ணயிக்கப்பட்டது. 
 
இந்நிலையில் தற்போது மீண்டும் கூடுதலா ரூ.50 விலை உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் வீட்டு உபயோகத்திற்கான கேஸ் சிலிண்டர் விலை ரூ.710 ஆக உயர்ந்துள்ளது. ஆக மொத்தம் இந்த வருடம் முழுவதும் ஐந்து முறை சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டுள்ளது. 
 
அதாவது, மே மாதம் ரூ.599.50, ஜூன் மாதம் ரூ.606.50, ஜூலை மாதம் ரூ.610.50, டிசம்பர் மாதம் ரூ.660, மீண்டும் இன்று ரூ.710.00 ஆக சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்