ஒரே மாதத்தில் இரண்டு முறை சிலிண்டர் விலை உயர்வு! – மக்கள் அதிர்ச்சி!

செவ்வாய், 15 டிசம்பர் 2020 (12:11 IST)
மாதாமாதம் கேஸ் சிலிண்டர் விலை நிர்ணயமாகி வரும் நிலையில். இந்த மாதத்திற்கு மட்டும் இரண்டு முறை விளை உயர்ந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மத்திய அரசின் அறிவுறுத்தல்படி மாதம்தோறும் சிலிண்டர் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த டிசம்பர் மாதத்திற்கு வீட்டு உபயோகத்திற்கான சிலிண்டர் விலை ரூ.50 உயர்ந்து ரூ.660 ஆக விலை நிர்ணயிக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது மீண்டும் கூடுதலா ரூ.50 விலை உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் வீட்டு உபயோகத்திற்கான கேஸ் சிலிண்டர் விலை ரூ.710 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த ஒரு மாதத்திற்குள்ளாக ரூ.100 கேஸ் சிலிண்டர் விலை உயர்ந்துள்ளது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்