புரோட்டா சாப்பிட்ட 5 பசுமாடுகள் பலி.. 9 மாடுகள் கவலைக்கிடம்.. அமைச்சரின் அதிரடி நடவடிக்கை..!

Mahendran
செவ்வாய், 18 ஜூன் 2024 (14:34 IST)
கேரளாவில் புரோட்டா சாப்பிட்ட ஐந்து பசு மாடுகள் பரிதாபமாக பலியானதாகவும் மேலும் 9 மாடுகள் கவலைக்கிடமாக இருப்பதாகவும் கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
கேரளாவில் உள்ள கொல்லம் மாவட்டத்தில் பால்பண்ணை ஒன்றை நடத்திய ஒருவர், தான் வளர்க்கும் பசுக்களுக்கு புரோட்டாவை தீவனமாக வழங்கி வந்ததாக கூறப்படுகிறது. இதனை அடுத்து கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் சில பசுக்களின் வயிறு திடீரென வீங்கியதை அடுத்து சில பசுக்கள் மயங்கி விழுந்தன.
 
இதனை அடுத்து உடனடியாக கால்நடை மருத்துவர் வரவழைக்கப்பட்ட நிலையில் சிகிச்சையின் பலன் இன்றி ஐந்து மாடுகள் உயிரிழந்ததாகவும் ஒன்பது மாடுகள் கவலைக்கிடமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.
 
இதை அடுத்து அங்கு கேரளா கால்நடைத்துறை அமைச்சர் நேரில் வந்து பசுக்களுக்கு தீனி அளிப்பது குறித்து பால்பண்ணை உரிமையாளருக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினார். மேலும் பால் பண்ணை உரிமையாளருக்கு அரசு சார்பில் இழப்பீடு வழங்கவும் அவர் உத்தரவிட்டு உள்ளார்.
 
Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்