சன்னிலியோன் நடன நிகழ்ச்சி.. கேரள பல்கலைக்கழக துணைவேந்தர் அனுமதி மறுப்பு..!

Mahendran

வியாழன், 13 ஜூன் 2024 (13:37 IST)
கேரள பல்கலைக்கழக வளாகத்தில் சன்னி லியோன் நடன நிகழ்ச்சி நடைபெற இருந்த நிலையில் அந்த பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் அதற்கு அனுமதி மறுத்துள்ளார்.
 
கேரளா தலைநகர் திருவனந்தபுரத்தில் உள்ள பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி வளாகத்தில் ஜூலை 5ஆம் தேதி சன்னி லியோன் நடன நிகழ்ச்சி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த நிலையில் தற்போது அந்த பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் இந்நிகழ்ச்சிக்கு அனுமதி மறுத்துள்ளார்.
 
கடந்த ஆண்டு எர்ணாகுளம் மாவட்டத்தில் கொச்சின் அறிவியல் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் ஒரு இசை நிகழ்ச்சி நடந்தபோது கூட்ட நெரிசலில் நான்கு மாணவர்கள் உயிரிழந்ததை அடுத்து திருமானந்தபுரம் பல்கலைக்கழகத்தின் சன்னி லியோன் நிகழ்ச்சிக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
 
இந்த நிலையில் திருவனந்தபுரம் பல்கலைக்கழகத்தில் சன்னி லியோன் நிகழ்ச்சி ரத்து செய்யப்படுவதை உறுதி செய்யுமாறு பல்கலைக்கழக பதிவாளருக்கு துணைவேந்தர் உத்தரவு பிறப்பித்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளன.
 
Edited by Mahendran
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்